Monday, June 24, 2013
குன்னூர்::இலங்கை அதிகாரிகளுக்கு ராணுவ பயிற்சி அளிப்பதை கண்டித்து மதிமுக, இந்து மக்கள் கட்சி, திராவிட விடுதலை இயக்கம் ஆகியவை நாளை குன்னூரிலுள்ள வெலிங் டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இதையொட்டி, ராணுவ முகாமை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் குன்னூர், வெலிங்டனில் பதற்றம் நிலவுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ்.பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திரா ஹெட்டி யாராச்சிகே ஆகியோருக்கு 10 மாத பயிற்சி கடந்த 27ம் தேதி முதல் நடந்து வருகிறது.
இதை கண்டித்து பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து வெலிங்டன் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடந்த 2 நாட்கள் முன்பு மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பெரியார் தி.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் முற்றுகை போராட்டம் நடத்தின. இதையடுத்து ராணுவத்துடன் இணைந்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் நேற்று மாலை ராணுவ முகாமை முற்றுகையிட்டனர். திடீரென உள்ளே புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் துரத்தி சென்று லேசான தடியடி நடத்தி வெளியேற்றினர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மதிமுக பொதுசெயலாளர் வைகோ, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், திராவிடர் விடுதலை இயக்க தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் நாளை ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முகாமை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவ லாரிகள் சாலையின் குறுக்கே போட்டு ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குன்னூர் பதற்றமாக உள்ளது. பொதுமக்கள், பயணிகள் கடும் சோதனைக்கு ஆளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர், பந்தலூரில் கடைகள் அடைப்பு!
கூடலூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்தும், அவர்களை உடனடியாக வெளியேற்ற கோரியும் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் இன்று காலை 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
மதிமுக, விடுதலைசிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, பா.ம.க., மனித நேய கட்சி, அகில இந்திய சமத்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் நடந்த போராட்டத்திற்கு இந்தியன் டிரைவர் அசோஷியேசன், நீலகிரி மாவட்ட மோட்டார் டிரைவர்ஸ் யூனியன், தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்திருந்தன.
பந்த் காரணமாக கூடலூர், பந்தலூர், உப்பட்டி, கொளப்பள்ளி, சேரம்பாடி, அய்யங்கொல்லி தமிழக & கேரள எல்லையான எருமாடு,பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளில் டீக்கடை, பேக்கிரி, ஓட்டல்கள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
தனியார் வாகனமான ஆட்டோ, ஜீப், டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. கேரள & கர்நாடக இடையேயான லாரி போக்குவரத்து மட்டும் வழக்கம் போல் இயங்கியது.

No comments:
Post a Comment