Monday, June 24, 2013

குஜராத் மாநிலம், ஜம்நகர் மாவட்டத்தில் ராணுவ பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது!

Monday, June 24, 2013
அகமதாபாத்::குஜராத் மாநிலம், ஜம்நகர் மாவட்டத்தில் விமானப் படை தளம் உள்ளது. இங்கு பயிற்சி பெறும் விமானப்படை வீரர்கள் போர் விமானங்களில் குறிப்பிட்ட எல்லை பறந்து சென்று மீண்டும் தளத்தை வந்தடைவார்கள்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் லால்பர்டா கிராமத்தின் மீது 'எம்.ஐ.ஜி.-29' ரக விமானம் பறந்து சென்றது. சற்று நேரத்திற்குள் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையை நோக்கி செங்குத்தாக பாய்ந்து நொறுங்கியது.

சுதாரித்துக் கொண்ட விமானி பாராசூட்டுடன் விமானத்தில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதே பகுதியல் 'எம்.ஐ.17' ரக விமானங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 9 விமானப் படை வீரர்கள் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

இன்றைய விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment