Monday, June 24, 2013
இலங்கை::யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் மூன்று படகுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகத்திற்குரியவர்களும் எதிர்வரும் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்றைய தினம் மல்லாகம் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீ வைக்கப்பட்ட படகுகளில் ஒன்று தீப்பற்றிய நிலையில் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சுமார் 19 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று படகுகளும் அதிலிருந்த இயந்திரங்கள் மற்றும் வலைகளும் தீக்கிரையாகின.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் குழுவினருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையால் குறித்த படகுகளுக்கு தீ வைக்கப்பட்டமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக இளவாலை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment