Monday, June 24, 2013

நொச்சியாகம - லிதவெவ பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவ சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

Monday, June 24, 2013
இலங்கை::நொச்சியாகம - லிதவெவ பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் காயமடைந்து அநுராதபுரம் வைத்திய
சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
நேற்றிரவு வாடகைக்கு முச்சக்கர வண்டியொன்றில் சென்ற சந்தேகநபர் பின்னர் முச்சக்கர வண்டி உரிமையாளரின் பணத்தையும் கையடக்கத் தொலைபேசியையும் கொள்ளையிட்டுள்ளார்.
 
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய லிதவெவ பிரதேசத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த சந்தேகநபர் பொலிஸார் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
 
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment