Monday, June 24, 2013

அமெரிக்க ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென் ரஷ்யா பயணம்!

Monday, June 24, 2013
ஹாங்காங்::அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென், ரஷ்யா சென்று உள்ளார். அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி நிபுணர், எட்வர்டு ஸ்னோடென். சமீபத்தில், அமெரிக்க புலனாய்வு ரகசியங்கள் பலவற்றை அம்பலப்படுத்தினார்.
 
உளவு அமெரிக்க அரசால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதால், ஹாங்காங்கில் உள்ள ஓட்டலில் எட்வர்டு தங்கியிருந்தார். அவரை, தங்களிடம் ஒப்படைக்கும் படி, அமெரிக்கா வற்புறுத்தியது.
தற்போது ஸ்னோடென் மீது, உளவு பார்த்தல், அரசு ஆவணங்களை திருடியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் அவருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
ஹாங்காங்கில் தங்கியிருந்தால், அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் அபாயம் உள்ளதாகக் கருதிய ஸ்னோடென், நேற்று, ரஷ்யாவுக்கு ரகசியமாகச் சென்றார்.
ஐஸ்லாந்து நாட்டில் தஞ்சம் அடைய அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார். எனினும், ஸ்னோடென், ரஷ்யா வந்த விவகாரத்தை அந்நாட்டு அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.

No comments:

Post a Comment