Wednesday, June 19, 2013
இலங்கை::கிண்ணியா குட்டிக்கராச்சி பிரதேசத்தில் சட்ட விரோதமாக விறகு ஏற்றி வந்ததாக கூறப்படும் 6 வண்டில்களை விசேட அதிரப்படையினர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்வதற்கு எதிர்ப்புத்தெரிவித்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை தொடர்ந்து, நேற்று (18) நள்ளிரவு வரை பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

குறித்த வண்டில்களை விசேட அதிரடிப்படையினர் விறகுகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து பிரதேச வாசிகளுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியது.
கைப்பற்றப்பட்ட வண்டில்களை விடுவிக்குமாறு பிரதேச வாசிகள் கோரியதுடன் அங்கிருந்தவர்களில் சிலர் விசேட அதிரடிப்படையினர் மீது கற்களை வீசி தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, கூட்டத்தினரை கலைப்பதற்காக விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்ததுடன் அங்கு குழுமியிருந்தவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தினால் கிண்ணியா பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. நிலமையைச் சமாளிப்பதற்காக உடனடியாக பொலிஸார் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இருந்தும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடிணமாக இருந்ததால் கிண்ணியா உலமா சபை ஸ்தலத்திற்கு அழைக்கப்பட்டது.
இதேவேளை, 6 விறகு வண்டில்களையும் கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பொது மக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக வீதிகளால் சென்றவர்கள்
மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழப்ப நிலை நேற்று (18) நள்ளிரவு வரை நீடித்திருந்தது.

No comments:
Post a Comment