Wednesday, June 19, 2013
குன்னூர்::நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திரா ஹெட்டி யாராச்சிகே ஆகியோருக்கு 10 மாத பயிற்சி கடந்த 27ம் தேதி முதல் நடந்து வருகிறது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு நிறுத்தும் வரையும், தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும் வரையும் இலங்கையை சேர்ந்த அதிகாரிகளுக்கு இங்கு எவ்வித பயிற்சியும் அளிக்க கூடாது. அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து வெலிங்டன் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பெரியார்.தி.க., உள்ளிட்ட அமைப்புகள் இலங்கை அதிகாரிகளை வெளியேற்ற கோரி ராணுவ முகாமை முற்றுகையிட்டனர். இதில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 486 பேரை போலீசார் கைது செய்து குன்னூரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை நீலகிரி மாவட்ட எஸ்.பி. செந்தில் குமார் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது:
குன்னூர் வெலிங்டன் பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன தணிக்கைகள் நடந்து வருவதோடு, லாட்ஜ்கள், ஓட்டல்களில் தொடர் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு நிறுவனங்களான அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை, பாஸ்டியர் ஆய்வகம், அஞ்சலகம் போன்றவற்றில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல சுற்றுலா தலங்களிலும் மாறு வேடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவ முகாம் நுழைவுவாயிலில் ராணுவமும் போலீசாரும் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரச்னை முடிவுக்கு வரும் வரை பாதுகாப்பு பணிகள் நீடிக்கும். இவ்வாறு எஸ்.பி.செந்தில்குமார் கூறினார்.

No comments:
Post a Comment