Wednesday, June 19, 2013

திருகோணமலை இயற்கைத்துறை முகத்தைக் காண மக்கள் படையெடுப்பு!!

Wednesday, June 19, 2013
இலங்கை::திருகோணமலை இயற்கைத்துறை முகத்தைக் காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து  நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப் பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
 
தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் எனும் கப்பலில் மக்கள் ஏறிப்பார்க்கக்கூடிய வசதிகளை அங்குள்ள பாதுகாப்புதர அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
 
காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி மாணவர்கள் பெற்றோர்களுடன் கல்விச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு அங்கு சென்றனர். கப்பலில் பயணிக்கும் போது பிரயாணிகள் அணிய வேண்டிய பாதுகாப்பு கவசத்தின் முக்கியத்துவம் பற்றி துறைமுக உத்தியோகத்தர்கள் மக்களுக்கு விளங்கப்படுத்தினர்.
 
அதனால் மக்கள் மேல்தளம், கீழ்த்தளம் என சகல பகுதிகளையும் பார்வையிட்டு கப்பலிலுள்ள ஆசனங்களில் அமர்ந்து சந்தோசமாக பயணத்தைக் களிக்கின்றனர்.
 
வாழ்க்கையில் முதற்றடவையாக கப்பலில் ஏறி இறங்கியோர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

No comments:

Post a Comment