Wednesday, June 19, 2013

இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் யாஸ்வர்தன் குமார் சின்ஹா கொழும்புக்கு வருகை!


Wednesday, June 19, 2013
இலங்கை::இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் யாஸ்வர்தன் குமார் சின்ஹா  கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இந்தியாவின் தெற்காசியாவுக்கு பொறுப்பான வெளிவிகார செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர், வை.கே. சின்ஹா இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1958ம் ஆண்டு டெல்கியில் பிறந்த வை.கே.சின்ஹா, தமது 32வது வயதிலேயே இந்திய இராஜதந்திர பிரதிநிதி என்ற அந்தஸ்த்தை பெற்றவராவார்.அவர் முதலில் அபுதாபியின் பிரதி தூதுவராக இருந்தார்.

அதன்பின்னர் பாகிஸ்தான், வெனின்சுலா போன்ற நாடுகளின் உயர்ஸ்தானிகராகவும் இருந்துள்ளார்.அத்துடன் அமெரிக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் பிரதிநிதியாக கடமையாற்றியுள்ளார்,

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதிநிதியாகவும் செயற்பட்டுள்ள இவர், அரேபிய மொழியிலும் தேர்ச்சிப் பெற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment