Monday, June 10, 2013
கொலம்பியா::உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளும் பள்ளிப் பாடங்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘வி.கோ’ என்ற பெயரில் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 50 குழந்தைகள் இதன் உதவியுடன் வீட்டில் இருந்தபடியே பாடம் படித்து வருகின்றனர்.அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலம் சம்டர் நகரை சேர்ந்த சிறுமி லெக்சி (9). மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவளால் பள்ளிக்கூடம் போக முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வீட்டுக்கு வந்து டியூஷன் எடுக்க அவளது அப்பா, அம்மா ஏற்பாடு செய்தார்கள். என்னதான் வீட்டிலேயே பாடம் படித்தாலும், ஸ்கூலுக்கு போய் வருவது போல ஆகுமா? சக மாணவர்களுடன் பேசி, சிரித்து, விளையாடி, குறும்புகள் செய்யும் சந்தோஷங்கள் தன் மகளுக்கு கிடைக்கவில்லையே என்று வருந்திய பெற்றோர், சமீபத்தில் ‘வி.கோ’ ரோபோவை அவளுக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர்.
ஏறக்குறைய 3&ம் வகுப்பு படிக்கும் மாண வன் சைஸில் சுமார் 4 அடி உயரத்துக்கு இருக்கிறது ரோபோ. நகர்வதற்கு சக்கரங்கள். ரோபோவின் முக பகுதியில் கேமரா மற்றும் வீடியோ திரை. இதன் மொத்த கன்ட்ரோலும் வீட்டில் இருக்கும் மாணவி லெக்சியிடம் இருக்கும். தன் கம்ப்யூட்டர் மூலம் இதை அவள் இயக்குவாள். தினமும் காலையில் பள்ளியில் மணி அடித்ததும், ரோபோ நகர்ந்து வந்து வகுப்பில் ‘உட்கார்ந்து’ கொள்ளும். அங்கு நடக்கும் எல்லாம் கேமரா வழியாக லெக்சிக்கு தெரியும். லெக்சியின் முகம் ரோபோவின் ஸ்கிரீனில் தெரியும்.
டீச்சர் அட்டெண்டன்ஸ் எடுத்தால், வீட்டில் இருந்து லெக்சி ‘யெஸ் மிஸ்’ என்று குரல் கொடுப்பாள். அது, ரோபோவின் ஸ்கிரீனில் தெரியும். டீச்சர் நடத்தும் பாடங்களை கவனிப்பது, சக மாணவ, மாணவிகளுடன் பேசுவது என எல்லாமே லெக்சிக்கு இதன் மூலமாகத்தான். பாடம் நடத்தும்போது சந்தேகம் என்றால், தன் கம்ப்யூட்டரில் ஒரு பட்டனை அழுத்துவாள். ரோபோவில் விளக்கு எரியும். டீச்சர் விளக்கம் அளிப்பார்.
வி.கோ. ரோபோ வந்ததில் இருந்து லெக்சி மிகவும் உற்சாகமாகிவிட்டாளாம். நேரிலேயே பள்ளிக்கு செல்வது போல உணர்கிறாளாம். சொல்லி மகிழ்கிறார்கள் பெற்றோர். தினமும் காலையில் ரோபோவை காரில் ஏற்றி பள்ளியில் கொண்டு போய் விட்டுவிட்டு, மாலையில் திரும்ப அழைத்து வருவது அவர்களது வேலை. தன் செல்ல ரோபோவுக்கு ‘பிரின்சஸ் (இளவரசி) வி.கோ என்று பெயர் வைத்திருக்கிறாள் லெக்சி. அதற்கு ஸ்கர்ட் போடுவது, ரிப்பன் கட்டிவிடுவது, ‘கழுத்தில்’ மணிமாலை போடுவது.. என குஷியாகிவிட்டாளாம் லெக்சி.
லெக்சி போல அமெரிக்காவில் சுமார் 50 குழந்தைகள் தற்போது வி.கோ. ரோபோ உதவியுடன் பள்ளிக்கூடம் போகாமலே பாடம் படித்து வருகிறார்கள். அமெரிக்காவில் தற்போது 23 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு பள்ளி செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வி.கோ. ரோபோ வரப்பிரசாதமாக இருக்கும் என்கிறது இந்த ரோபோவை தயாரித்துள்ள வி.கோ. நிறுவனம். கம்பெனி பாஸ் & ஊழியர்கள் பேசுவது, டாக்டர் & நோயாளி பேசுவது ஆகியவற்றுக்கு இந்த வகை ரோபோ ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, கல்விக்கு பயன்படும் வகையில் சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விலை ரூ.3.50 லட்சம். ஆண்டு பராமரிப்பு கட்டணம் ரூ.68 ஆயிரம். இன்டர்நெட், ஜிபிஎஸ் உதவியுடன் இது இயங்குகிறது. அதில் ஏதும் மக்கர் ஏற்பட்டால் தூக்கி போட வேண்டியதுதான் என்கின்றனர் வி.கோ. நிறுவன இன்ஜினியர்கள்.

No comments:
Post a Comment