Monday, June 10, 2013
இலங்கை::கடும் காற்றுடனான வானிலையால் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்த 41 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை::கடும் காற்றுடனான வானிலையால் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்த 41 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அஹுங்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியி
ல் மாத்திரம் 10 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவற்றில் ஏழு சடலங்கள் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தினை அண்மித்த கடற்கரையில் இன்று இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
இவை தெஹிவளை மற்றும் மொறட்டுவை பகுதியைச் சேர்ந்தவர்களின் சடலங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த சடலங்கள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment