Monday, June 10, 2013
இலங்கை::13வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான உத்தேச சீர் திருத்தத்தினை முன்னெடுக்க வேண்டாம் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு முயற்சிப்பதை விட பல்லினத்தன்மைக்கு மதிப்பளிப்பது மக்களை ஒன்று திரட்டி புதியதொரு யாப்பினை ஏற்படுத்துவதே சிறந்த நடவடிக்கை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13வது திருத்தத்தை அரசியல் அமைப்பிலிருந்து முற்றாக நீக்காது அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாடி பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக முழுமையான
அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குமாறு ஆயர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன, மத வேறுபாடுகள் அற்ற நீதியைப்பாதுகாக்கும், சமாதனத்தை ஏற்படுத்தும் சுபீட்சம் மலரும் ஒரு அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே ஆயர்களின் எதிர்பார்ப்பு என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய வட மாகாண சபைத் தேர்தல் 13வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அமைவாகவே நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
அதன் பின்னர் புதிய அரசியல் அமைப்பொன்றை நாட்டிற்கு அறிமுகப்படுத்த முடியும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேரருட்திரு மல்கம் கர்த்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பொதுச் செயலாளர் பேரருட்திரு வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை ஆகியோரது கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய யாப்பினை முன்னெடுப்பதன் ஊடாக அனைத்து மக்களுக்கும் நீதியை ஏற்படுத்தும் நிலைமையை உருவாக்க வேண்டும் எனவும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் அரசில் கட்சிகளும் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைய வேண்டும் என பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment