Monday, June 10, 2013
புதுடெல்லி::பாரதிய ஜனதா கட்சியிலிருந்து மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராஜினாமா செய்துள்ளார். அவர் கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கட்சியில் முக்கிய பதவி அளிக்கப்பட்டதால் அத்வானி அதிருப்தி அடைந்தார். மேலும் கோவாவில் நடந்த அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் உடல்நலம் காரணம் காட்டி புறக்கணித்தார்.

இந்நிலையில் கட்சியின் முக்கிய இடத்திற்கு வந்துள்ள மோடி, மத சா£ப்பு உள்ளவராக கருதப்படுவதால் அந்த பெயரை மாற்ற பாரதிய ஜனதா தனது சக்தியை அனைத்தும் செலவளிக்க வேண்டியது இருக்கும் என அத்வானி கவலைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி தலைமையின் செயல்பாடுகள் மீதான கோபம் மற்றும் அதிருப்தியின் காரணமாக அத்வானி பதவி விலகியதாக கூறப்படுகிறது. அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகினாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டும் தாம் இருப்பதாக அத்வானி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதனையடுத்து ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அத்வானி, தற்போது கட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தன்னால் ஏற்க முடியவில்லை என்று கூறினார். மேலும், தன் வாழ்நாள் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் ஜனசங்கத்துக்காக உழைத்ததாகவும் அத்வானி கூறியுள்ளார். தற்போது கட்சியில் இருக்கும் சிலர் தன்னலம் மட்டுமே விரும்புவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

No comments:
Post a Comment