Monday, June 10, 2013

சீனா மேலும் உதவினால் விவசாயத்தில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தலாம்: இலங்கை பிரதமர் தி.மு.ஜயரத்ன!

Monday, June 10, 2013
இலங்கை::இலங்கையில் மேற்கொள்ளப்படும் மரமுந்திரிகை செய்கையினை நவீன முறையில் மேற்கொள்ள சீனா அரசாங்கமும் தனியார் துறையினரும் உதவ முன்வந்துள்ளதாக பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்தார்.
 
சினாவுக்கான  உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள பிரதமர் தலைமையிலான இலங்கையின் பிரதி நிதிகள் கொண்ட குழுவினர் யூனான் பிராந்தியத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மைல் பிரதேசத்தின் வைன்யார்ட் கிராமத்திற்கு விஜயம் செய்து, அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் மரமுந்திரிகை செய்கை மற்றும் பழப்பாகு தொழிற்சாலை என்பனவற்றை பார்வையிட்டதன் பின்னர்இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் தி.மு.ஜயரத்ன விடுத்த வேண்டுகோளினையடுத்து இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
 
நவீன தொழில் நுட்பங்களை கொண்டு பழப்பாகு செய்யப்படும் தொழிற்சாலையினையும் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
இலங்கையில் தற்போது பல பகுதிகளில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட்ட போதும் அதனைது தரத்தை சிறந்ததாக மாற்றுவது தொடர்பிலான வழி முறைகள் மற்றும் பராமறிப்பு நடவடிக்கைகள் குறித்து இல்ஙகையின் மரமுந்திரகை செய்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பது முக்கியமாக கொண்டு இந்த விஜயம் அமைந்ததாக பிரதமர் தி.மு.ஜயரத்ன கூறினார்.
 
சீனா இலங்கையின் விவசாய துறையின் மேம்பபாடுகளுக்காக மேலும் உதவிகளை வழங்க வேண்டும் என்று எடுத்துரைத்த பிரதமர், இதன் மூலம் இலங்கை விவசாயத்தில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வரும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்..
 
சீனாவினால் இலங்கை இராணுவத்துக்கு இராணுவ தொழில்நுட்பப் பயிற்சி!
 
சீனாவினால் இலங்கை இராணுவத்துக்கு இராணுவ தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. தற்கான ஒப்பந்தம், அண்மையில் சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாக பீஜின் போஸ்ட் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சுகளுக்கிடையில் உள்ள புரிந்துணர்வின் அடிப்படையில், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்க சீனா முன்வந்துள்ளதாக வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிதி உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ள நிலையில், மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவித்த வெளிவிவகார செயலாளர், இராணுவ தொழில்நுட்பப் பயிற்சி வழங்குவதற்கான விவகாரம் மேற்படி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment