Tuesday, June 18, 2013
இலங்கை::அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டல் மட்டுமன்றி இப்பகுதியின் மேம்பாடு தொடர்பில் அவர் கொண்டுள்ள அக்கறையின் காரணமாகவுமே இங்கு பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மருதங்கேணி பிரதேச செயலர் திருலிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் நான்கு கிராமங்களுக்கான மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2010 ம் ஆண்டு இப்பகுதியில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டதிலிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இங்கு அடிக்கடி வருகை தந்து மக்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளும் அதேவேளை, அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் துறைசார்ந்தோர் ஊடாக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
இதனடிப்படையில் தான் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் அமைச்சர் அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போக்குவரத்து, கல்விவசதி, சுகாதாரம், குடிநீர்விநியோகம், இவற்றுடன் மட்டுமல்லாது 60 வீதமான மக்களுக்கு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்கள் நலன்சார் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போதும் கூட அவரது வழிகாட்டலுடன் வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக நான்கு கிராமங்களுக்கான மின்விநியோக திட்டத்தை கிடைக்கப்பெறச் செய்வதில் அமைச்சர் அவர்களின் பங்கு முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இப்பேற்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் எதிர்காலங்களிலும் அமைச்சர் அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
இதன்போது வடக்கின் வசந்தம் திட்டப் பணிப்பாளர் குணசீலன் உரையாற்றும் போது, யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கின் வசந்தம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில் 600 கோடிரூபா செலவில் வடமாகாணத்தில் அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment