Tuesday, June 25, 2013

பயங்கரவாதத்தை ஒற்றுமையோடு எதிர்ப்போம் : பிரதமர் மன்மோகன் சிங்!

Tuesday, June 25, 2013
ஸ்ரீநகர்::பயங்கரவாதத்தை ஒட்டு மொத்த நாடும் ஒன்றுபட்டு எதிர்ப்போம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் இன்று பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பயங்கரவாத அச்சுறுத்தலை, ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஒருங்கிணைந்து எதிர்த்துப் போராடுவோம். பயங்கரவாதத்தை ஒரு போதும் வெற்றியடைய விட மாட்டோம் என்று கூறினார்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இன்றும் நாளையும் காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் காஷ்மீர் புறப்பட்டனர். உதம்பூர் விமான நிலையம் போய்ச்சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, மாநில கவர்னர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பிரதமர் வருகைக்கு முன்பு ஸ்ரீநகரில் நேற்று தீவிரவாதிகள் ராணுவ வாகனங்களை வழிமறித்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். 3 தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தை நோக்கி சரமாரியாக சுட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் 8 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து மன்மோகன்சிங் - சோனியா சுற்றுப்பயணத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை குவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும், எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் மன்மோகன்சிங் - சோனியாகாந்தி கலந்து கொண்டு எல்லையோர மாவட்டங்களுக்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தனர். பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநிலத்தில் ஹுரியத் அமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment