Tuesday, June 25, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படாமை அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தின் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரசியல் சாசனத்தில் ஏதேச்சையான மாற்றங்களை ஏற்படுத்தும் உரிமை தமக்குக் கிடையாது என ஜனாதிபதி கருதியதாகவும் இதனால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் தீர்மானம் எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment