Wednesday, June 26, 2013
டேராடூன்::கேதார்நாத் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு, டேராடூன்
திரும்பிக் கொண்டிருந்த, விமானப்படை ஹெலிகாப்டர், மலையில் மோதி நொறுங்கியதில்,
அதில் இருந்த, வீரர்கள் 19 பேர் பரிதாபமாக பலியாயினர்.
உத்தரகண்ட் பகுதியில்,
தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்கும் பணியில், விமானப்படை ஹெலிகாப்டர்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கேதார்நாத் பகுதியில் மீட்கப்பட்டவர்களை ஏற்றிய பல
ஹெலிகாப்டர்கள், கவுரிகுந்த் மற்றும் டேராடூன் பகுதிகளில் இறக்கி விட்டன. அவற்றில்
ஒரு ஹெலிகாப்டர், நேற்று விபத்தில் சிக்கியது.
கேதார்நாத்திலிருந்து டேராடூன் சென்ற
அந்த ஹெலிகாப்டரில், வீரர்களுடன் பலர் இருந்தனர். கவுரிகுந்த்தை நெருங்கிய
ஹெலிகாப்டர், திடீரென மலையில் மோதி நொறுங்கியது. இதில், ஹெலிகாப்டரில் இருந்த
வீரர்கள் அனைவரும் உடல் சிதறி இறந்தனர். மோசமான வானிலையே, விபத்துக்கு காரணம் என
கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஹெலிகாப்டர் சேவை, அந்த வழிதடத்தில் நிறுத்தப்பட்டது.
தங்கள் இன்னுயிரை பற்றிக் கவலைப்படாமல், அயராது மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள்
பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக பாடுபடும்
வீரர்களை இழந்த அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




No comments:
Post a Comment