Tuesday, June 25, 2013
கோவை::வெலிங்டன் முகாமில் இருந்து இலங்கை அதிகாரிகள் வெளியேறிய நிலையில் மதிமுக உள்ளிட்ட அமைப்புகளால் நடக்கவிருத்த முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டு கண்டன பொதுக்கூட்டமாக குன்னூரில் நடக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இம்மையத்தில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ்.பந்தாரா தாசநாயகே,மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திராஹெட்டி ஆகியோருக்கு கடந்த மாதம் 27ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டது. இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால், வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இன்று வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, இலங்கை அதிகாரிகள் நேற்று வெளியேற்றப்பட்டதால் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி சார்பில் இன்று நடக்கவிருந்த முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக குன்னூர் வி.பி. தெருவில் இன்று காலை 10 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகிக்கிறார். பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்கின்றன.

No comments:
Post a Comment