Tuesday, June 25, 2013

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர், வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி சந்தித்து பேச்சுவார்த்தை!

Tuesday, June 25, 2013
இலங்கை::பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முகமட் சாபீர் ரகுமான் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை 24 யூன் 2013 யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், வாழ்வாதாரச் செயற்பாடுகள், நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநர் விளக்கங்களை வழங்கினார். தற்போது வட மாகாணம் பல துறைகளில் தன்னிறைவு அடைந்துள்ளது  எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் ஆகியோர் இக்கலந்துரையாடலின் போது உடனிருந்தார்கள்.
 
இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாரிய அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் இந்தச் சந்திப்பின் போது ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
 
யுத்தத்திற்கு பின்னரான மிகவும் குறுகிய காலப் பகுதிக்குள் அரசாங்கம், வடக்கில் மேற்கொண்டு வரும் பாரிய அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி விரிவாக விளக்கமளித்துள்ளார்.
 
இதேவேளை, புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் முன்னெடுத்து வரும் பொய்ப் பிரசாரம், அத்துடன் நடைபெறவுள்ள வட மாகாண தேர்தல் தொடர்பிலும் விளக்க மளித்துள்ளார்.
 
வடக்கின் நிலவரங்களை கேட்டறிந்து கொண்ட பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் பாரிய அபிவிருத்தி மற்றும் நல் லிணக்க செயற்பாடுகளை பாராட்டியுள்ளார்.
 
விவசாய, கூட்டுறவு மற்றும் புடவைக் கைத்தொழில் துறைகளில் தமது நாட்டிற்கு பெருமளவில் அனுபவங்கள் உள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் தமது நாடு தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
வட மாகாண ஆளுநருடன் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் வட மாகாண ஆளுநரின் செயலாளர் எல். இளங்கோவன், வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் ஆகி யோரும் கலந்துகொண்டுள்ளனர்.
 
இதேவேளை, வேறு நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்திருந்த பாரம்பரிய கைத்தொழில் கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தாவையும் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
 
பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தனது வட பகுதி விஜயத்தின் ஓர் அங்கமாக இன்று முல்லைத்தீவுக்கும் நாளை கிளிநொச்சிக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

No comments:

Post a Comment