Tuesday, June 25, 2013

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை கொலை செய்ய முயற்சி; புலி சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்!

Tuesday, June 25, 2013
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை கொலை செய்வதற்கு குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குறித்த வழக்கின்  பிரதிவாதிகள்  நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 
செல்வராஜா கிருபாகரன் எனப்படும் அல்சார் மொஹமட் மற்றும் சண்முகலிங்கம் சூரியகுமார்,
தம்பையா பிரதாப் ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
 
அன்சார் மொஹமட் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு, ரம்புக்கனை ஆகிய பகுதிகளில் மேலும் சிலருடன் இணைந்து மொகமட் சித்தி எனப்படும் துர்கா என்பவரை ஈடுபடுத்தி அப்போதைய இராணுத் தளபதி சரத் பொன்சேக்காவை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
இதற்காக சதித் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 230 குற்றச்சாட்டுக்கள் சந்தேகநபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதி சார்பில் ஆஜராவதற்கு சட்டத்தரணி ஒருவர் இல்லாத காரணத்தினால் வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  

 

No comments:

Post a Comment