Tuesday, June 25, 2013
நாகை::வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் இலங்கை அகதிகள் 65 பேருடன் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற ஒரு மீனவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்க ஆபரேஷன் ஹம்லா என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி நடந்தது. இதையொட்டி போலீசார் கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேளாங்கண்ணி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 3 பேரை க்யூ பிராஞ்ச் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், மதுரை மாவட்டம் திருவாதவூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ரமணன் (எ) உமா ரமணன் (32), விழுப்புரம் மாவட்டம் கீழ்புதுப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பாபு (30), நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டியை சேர்ந்த தயா (எ) ஞானவரயோன் (31) என்பது தெரியவந்தது.
விசாரணையில் விழுப்புரம், நாமக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 65 இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக விசைப்படகு மூலம் கொண்டுசெல்ல திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. இதற்காக நாகை அடுத்த செருதூரை சேர்ந்த மீனவர் செந்தில் (30) என்பவரிடம் 25 லட்சத்திற்கு ஒரு விசைப்படகை உமா ரமணன் விலைக்கு வாங்கியுள்ளது தெரிந்தது. படகில் செந்திலும், உமா ரமணனும் டிரைவராக பணியாற்றவும் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் செருதூரை சேர்ந்த மீனவர் செந்திலை போலீசார் கைது செய்தனர். விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் படகில் இருந்த ஸீ5 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் க்யூ பிராஞ்ச் போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு பேரையும் கைது செய்து நாகை 1வது குற்றவியல் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். இதில் புரோக்கர்கள் உமா ரமணன், பாபு, தயா ஆகிய 3 பேரையும் சென்னை புழல் சிறையிலும், செந்திலை நாகை மாவட்ட சிறையிலும் அடைக்க மாஜிஸ்திரேட் சரஸ்வதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment