Wednesday, June 19, 2013
சென்னை::இந்துத்துவால்தான் நாட்டில் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். பாரதிய ஜனதாவில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆதரவு கொடுத்து வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் வெளிப்படையாக பேசினார். அத்வானிக்கும் நிதீஷ்குமாருக்கும் பதில் அளிக்கும் வகையில் பகவத் பேச்சு இருந்தது. யாரும் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்துத்வால்தான் நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியும். இந்துத்வாலில்தான் இந்தியான் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்று பகவத் கூறினார்.
நாங்கள் தலைவர்களையும் கொள்கைகளையும் மாற்றினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்துத்வா கொள்கைகளால்தான் எதையும் செய்ய முடியும். இந்தியாவை வல்லரசாக்க அரசியல் ஒரு வழிமுறை அல்ல. இந்தியாவை வல்லரசு நாடாக்க இந்துத்துவால்தான் முடியும் என்றும் பகவத் கூறினார். மத்திய அரசானது தூதரக ரீதியாக தோல்வி அடைந்துவிட்டது. நாட்டின் எல்லைப்பகுதிகள் பாதுகாப்பாக இல்லை. இந்திய எல்லைக்குள் சீன படைகள் அடிக்கடி ஊடுருவி ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது. பின்னர் நிபந்தனையின் பேரில் சீனப்படை பின்வாங்கி செல்கிறது. ஆனால் சீனாவுக்கு நம்மால் பாடம் கற்பிக்க முடியவில்லை. இந்திய கைதி சரப்ஜித் சிங் படுகொலைக்கு பின்னர் பாகிஸ்தான் நாடானது அத்துமீறி செயல்படுகிறது என்று பகவத் கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
.jpg)
No comments:
Post a Comment