Wednesday, June 19, 2013

இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட 28 புதிய வீடுகள் சாம்பூரில் கையளிப்பு!

Wednesday, June 19, 2013
இலங்கை::சாக்பூர் வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 22 ஆவது பிரிவுப் படையினரால் கட்டப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கான 28 வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
 
இவ் வீடுகள்யாவும் சர்வதேச இந்திய திரைப்பட கல்லூரி மற்றும் வாழ்விட மனிதாபிமானத்தின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட செயலாளர் செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் படையினரால் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
விழாவின் போது, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) டீ.டீ.ஆர் டி சில்வா, திருகோணமலை மாவட்ட செயலாளர் ஆகியோர் கிழக்கு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவுடன் இணைந்து உரிமையாளர்களுக்கான வீடுகளைக் கையளித்தனர்.

No comments:

Post a Comment