Wednesday, June 19, 2013
இலங்கை::தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு உறுப்பினா்கள் இந்தியாவுக்கு சென்றமை தொடா்பாக நாடாளுமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய சாபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது..
நாடாளுமன்ற வெளிவிவகார குழுவுக்கு அறிவிக்காமல் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வெளிநாடுகளுக்கு சென்று அந்த நாடுகளின் பிரதமா் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் எவரையும் சந்திக்க முடியாது.
ஆகவே இலங்கை அரசியலமைப்பு விதிகளை மீறிய குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினா்கள் தன்டிக்கப்பட வேண்டும் என ஹெல உறுமயவின் நாடாளுமன்ற குழு தலைவா் அத்துரலியே ரத்தன தோர் கூறியதாக கொழும்பு தகவல்கள் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment