Wednesday, June 19, 2013
இலங்கை::பாரதூரமான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய புலிகளின் சந்தேகநபருக்கு புனர்வாழ்வளிக்க முடியாது என்று அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
ஜா-எலவில் வைத்து 1999 ஆம் ஆண்டு படுகொலைச்செய்யப்பட்ட ஜெனரல் லக்கி அல்கம கொலை வழக்கில் ஆஜரான அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணியான அஜாட் நவாவியே நீதிமன்றத்தில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில், சந்தேநபர்களான நால்வருக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் 110 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபரான ஆர்.ஏ.அஜித் நொஹான் என்ற கிச்சிமல்லி சார்பில் ஆஜரான சட்;டத்தரணி சந்தேகநபருக்கு தண்டனை வழங்காது அவரை புனர்வாழ்வளிப்புக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
தண்டனையின்றி புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவாராயின் தனது தரப்பை சேர்ந்தவரான அஜித் தனக்கெதிரான குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை அடுத்தே அரச சிரேஷ்ட சட்டத்தரணி, பாரதூர குற்றமான கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை புனர்வாழ்வுக்கு அனுப்புவது பொருத்தமில்லை என்று நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இந்த வழக்கில் ஆர்.ரவீந்திரன், நாகராஜா ஸ்ரீதரன், ஆஜித் குமாரசிறி ஆகியோர் ஏனைய சந்தேகநபர்களாவர். இந்நிலையில் இந்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக நீதிபதி மேற்படி வழக்கை செப்டெம்பர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:
Post a Comment