Thursday, June 20, 2013

பிராந்தியப் பாதுகாப்பு குறித்த பேச்சுகளை நடத்தும் நோக்கில் கொழும்பு செல்கிறார்: சிவ்சங்கர் மேனன்!

Thursday, June 20, 2013
சென்னை::இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த இராஜ தந்திரியுமான சிவ்சங்கர் மேனன் இந்திய அரசின் ஏற்பாட்டில் முக்கிய பயணமொன்றை மேற்கொண்டு ஜூலை 7ஆம்  திகதி கொழும்பு செல்லவுள்ளார்.
 
முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயணத்தின் போது சிவ்சங்கர் மேனன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்பாரெனத் தெரிகிறது.
 
பிராந்தியப் பாதுகாப்பு குறித்த பேச்சுகளை நடத்தும் நோக்கிலேயே மேனன் கொழும்பு செல்வதாகக் கூறப்பட்டாலும், அவர் இலங்கை அரசுடன் 13 ஆம்  திருத்தச் சட்டச் சர்ச்சைகள் குறித்துப் பேசும் நோக்கிலேயே கொழும்புக்கு செல்வதாக இந்திய உயர்மட்ட வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கு பிரதமர் மன்மோகன் சிங் உட்பட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசியுள்ள நிலையில் சிவ்சங்கர் மேனனின் இந்தப் பயணம் இலங்கை இந்திய அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

No comments:

Post a Comment