Tuesday June 11, 2013
இலங்கை::மனித உரிமை மேம்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்டுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழு இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்துள்ளதாக கனடா வெளியிட்டுள்ள கருத்து அதிர்ச்சியளிப்பதாக, இலங்கைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மனித உரிமை மேம்பாடு மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் உலகின் பல நாடுகள் இலங்கையை பாராட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம், நிலக்கண்ணி வெடி அகழ்வு, புனர்வாழ்வு, முன்னாள் போராளிகளை சமூகத்தில் மீள இணைத்தல், காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், உட்கட்டுமான வசதிகளை ஏறபடுத்தல், வீடமைப்பு, மொழிக்கொள்கை போன்ற பல்வேறு விடயங்களில் மேம்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment