Tuesday June 11, 2013
இலங்கை::இலங்கையில் காணப்படும் நிலைமைகள் குறித்து ஐக்கிய
இலங்கை::இலங்கையில் காணப்படும் நிலைமைகள் குறித்து ஐக்கிய
நாடுகள் அமைப்பு சிறப்பு விசாரணை நடத்த இலங்கை செல்வதற்கான கால எல்லையை அறிவிக்குமாறு ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் விடுத்த கோரிக்கை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
முக்கியமாக ஊடக சுதந்திரத்தின் பாதுகாப்பு பற்றி ஆராய்வதற்காக சிறப்பு விசாரணை நடத்த இலங்கைக்கு செல்ல இடமளிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அறிக்கையொன்றை தாக்கல் செய்த அமெரிக்க தூதுவர் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஊடக சுதந்திரத்தை தடுத்து வருவதாக கூறியிருந்தார். எனினும் அமெரிக்க தூதுவரின் முறைப்பாடு உண்மையில்லை என அரசாங்கம், மனித உரிமை பேரவையிடம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment