Tuesday June 11, 2013
பீஜிங்::சீனா விண்வெளி ஆய்வுக்காக 2வது பெண்ணை நாளை விண்ணுக்கு அனுப்புகிறது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் விண்வெளியில் ஆய்வுக்காக நிரந்த மையத்தை அமைத்துள்ளன. அதே போல் சீனாவும் விண்ணில் ஆய்வு மையம் அமைத்து வருகிறது. இதற்காக பயிற்சி பெற்ற வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் பணி 2020ல் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனாவில் இருந்து விண்வெளிக்கு புறப்பட்டு சென்ற லியு யங் என்ற பெண், மற்றும் 2 வீரர்கள் 13 நாட்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வு செய்தனர். தற்போது 2வது பெண்ணை விண்வெளிக்கு அனுப்ப சீனா ஏற்பாடுகள் செய்துள்ளது. நாளை மாலை லாங் மார்ச் என்ற ராக்கெட் மூலம் ஷென்சூ&10 என்ற விண்கலம் புறப்பட்டு செல்கிறது. இந்த விண்கலத்தில் வாங் யாபிங் (33) என்ற பெண்ணும், அவருடன் நை ஹைசங், ஜாங் ஜியாஹங் ஆகியோர் உடன் செல்கின்றனர்.
பட்டதாரியான பெண் வீராங்கனை வாங் யாபிங் விமான படையில் மேஜராக பணியாற்றுகிறார். இதன் மூலம் விண்வெளிக்கு சென்று நீண்ட நாள் ஆய்வு நடத்திய முதல் சீன பெண் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷென்சூ&10 விண்கலத்தில் நாளை புறப்பட்டு செல்லும் வீரர்கள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்ய உள்ளனர்.

No comments:
Post a Comment