Tuesday June 11, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டம் குறி
இலங்கை::13ம் திருத்தச் சட்டம் குறி
த்த கட்சிகளின் தீர்மானங்களில் அரசாங்கம் தலையீடு செய்யாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு எதிராக ஈ.பி.டி.பி கட்சி முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை ஈ.பி.டி.பி. பாராளுமன்றில் வெளிப்படுத்த முடியும் எனவும், அதில் எவ்விதத் தடையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதனை ஈ.பி.டி.பி. கட்சியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கொண்டுள்ள முரண்பாடுகளை களைய ஜனாதிபதி முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஜனாதிதி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது...
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் நிலவி வரும் முரண்பாடுகளை களையும் நோக்கில் ஜனாதிபதி, ஜாதிக ஹெல உறுமய, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிப் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
13ம் திருத்தச் சட்ட உத்தேச மாற்றங்கள் தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் போது தங்களுக்கு விரும்பியவாறு வாக்களிக்க முடியும் என ஜனாதிபதி, ஜாதிக உறுமயவின் சிரேஸ்ட உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவிடம் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment