Tuesday June 11, 2013
காந்தகார்::ஆப்கானிஸ்தான் காந்தகார் நகரில் 2 சிறுவர்களின் தலைகளை துண்டித்து தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் காந்தகார் 2வது மிகப்பெரிய நகரமாக உள்ளது. இங்கு தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம். தீவிரவாதிகளை ஒடுக்க, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இந்த படைகள் தற்போது வாபஸ் பெற்று வருகின்றன. இந்நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நேட்டோ படை வீரர்களை குறி வைத்து தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேட்டோ படையினரும், ஆப்கன் ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இதில் 7 தீவிரவாதிகள் இறந்தனர். இந்நிலையில் காந்தகாரில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
காந்தகார் தென் பகுதியில் ஆப்கன் ராணுவத்தினர், போலீசார் சோதனை சாவடி உள்ளது. இதன் அருகே கான் (10), ஹமீதுல்லா (16) ஆகியோர் வசித்தனர். சோதனை சாவடியில் போலீசார் சாப்பிட்டது போக மீதமுள்ள உணவை எடுத்து சென்று தங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து வந்தனர். நேற்று முன்தினம் தலிபான் தீவிரவாதிகளிடம் சிக்கிய சிறுவர்கள் இருவரையும், தீவிரவாதிகள் இரக்கமின்றி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் கான், ஹமீதுல்லா ஆகியோர் தலை, துண்டித்த உடல்களை அவர்கள் வசிக்கும் கிராமத்தின் அருகில் வீசிவிட்டு சென்றனர்.
இதுகுறித்து ஜாரி மாவட்ட தலைவர் ஜமால் அஹா கூறுகையில், ‘தீவிவாதிகளால் கொல்லப்பட்ட சிறுவர்கள் ஒன்றும் அறியாதவர்கள். குற்றமற்றவர்கள். இறந்தவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று கூறினார். ஆனால், சிறுவர்கள் படுகொலைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று தலிபான்கள் மறுத்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரசுக்கு உளவாளியாக இருந்ததாக கருதி 2 சிறுவன், ஒரு சிறுமியை கடத்தி தலிபான்கள் கொலை செய்தனர். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

No comments:
Post a Comment