Tuesday, June 11, 2013

20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!:-பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை; கைதான பிரதிப் பொலிஸ் மா அதிபரை விசாரிக்க அனுமதி!

Tuesday June 11, 2013
இலங்கை::20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட பொரளை பொலிஸ் நிலையத்தின் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
பொலிஸ் ஆணையை கவனத்திற்கொள்ளாது வாகனத்தை செலுத்திய ஒருவரிடம் இருந்து அவர்கள் இலஞ்சம் பெற்றுள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த
நபரை தாக்கியுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி கூறியுள்ளார்.
 
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவில் கடமையாற்றும் பொரளை பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்...
 
பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை; கைதான பிரதிப் பொலிஸ் மா அதிபரை விசாரிக்க அனுமதி!
 
பம்பலப்பிட்டியில் வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவை மூன்று நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி பெற்றுகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
 
இதற்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
சந்தேகநபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நேற்றிரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதுவரை 7 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment