Tuesday, June 11, 2013

13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமைய - ஜனாதிபதி சந்திப்பு!

Tuesday June 11, 2013
இலங்கை::13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு ஜாதிக ஹெல உறுமையவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதியை சந்
தித்துள்ளனர்.
 
அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
 
வடக்கு மாகாணசபை அமைக்கப்படும் முன்னர் யாப்பிற்கு இணைத்துக்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசியமானவை என ஜாதிக ஹெல உறுமைய முன்வைத்த 5 விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
 
இவ்வாறு முன்வைக்கப்பட்ட 5 விடயங்களில் 2ஐ, அமைச்சரவைக்கு முன்வைப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், அரசியல் அமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் வாக்களிப்ப இடம்பெறும் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமது மனசாட்சிக்கு அமைய செயற்பட வாய்ப்பளிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
 

No comments:

Post a Comment