Tuesday, June 18, 2013

சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Tuesday, June 18, 2013
இலங்கை::சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் வந்த, நிட்டம்புவ திகாரி பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து ஒரு கோடி 20 இலட்சம் பெறுமதியுடைய ஒரு கிலோ 510 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்...
 

No comments:

Post a Comment