Tuesday, June 18, 2013
சென்னை::தேமுதிக எம்எல்ஏக்கள் அனகை முருகேசன், பாஸ்கர், அருண் சுப்பிரமணியன், முத்துக்குமார், மனோகர் ஆகியோர் இன்று காலை 11.20 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு 25 நிமிடங்கள் நீடித்தது.
பின்னர் நிருபர்களிடம் அனகை முருகேசன் கூறுகையில், ‘‘மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரசின் ஆதரவு கேட்டு விஜயகாந்த் கொடுத்த கடிதத்தை ஞானதேசிகனிடம் கொடுத்தோம். அவர் காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பி, முடிவு அறிவிப்பதாக கூறினார்’’ என்றார்.
ஞானதேசிகனிடம் கேட்டபோது, ‘‘தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு 5 நாட்களுக்கு முன்பே காங்கிரஸ் மேலிடத்தை அணுகியுள்ளனர். இன்று என்னை முறைப்படி சந்தித்து ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்தனர். அதை மேலிடத்துக்கு அனுப்புவதாக கூறியுள்ளேன். முடிவை கட்சி தலைமை அறிவிக்கும்’’ என்றார். திமுக தரப்பில் ஆதரவு கேட்டுள்ளார்களா என்று கேட்டபோது, ‘திமுகவும் ஆதரவு கேட்டு கட்சி தலைமையை அணுகியுள்ளது’ என்றார் ஞானதேசிகன்.

No comments:
Post a Comment