Monday, June 17, 2013

அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு: இலங்கையில் தடை!

Monday, June 17, 2013
இலங்கை::அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
1999ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தலிபான்கள் மற்றும் அல் கய்தா தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 250க்கும் மேற்பட்ட அல் கய்தா செயற்பாட்டாளர்களின் பெயர் விபரங்கள் இந்தப் பட்;டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது,
 
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அல்கய்தா மற்றும் தலிபான்களின் சொத்துக்களை முடக்குவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
சர்வதேச பயங்கரவாதத்தை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது...

No comments:

Post a Comment