Wednesday, June 19, 2013

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு திரும்புமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!

Wednesday, June 19, 2013
இலங்கை::தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு திரும்புமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்களை நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் நிரந்தரமான ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார அபிவிருத்தியுடன் வட பகுதியில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் 22 வீதமான அபிவிருத்தி இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் ஆபத்தான வழிகளில் மக்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்து பாரியளவில் லாபமீட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகத் தெரிவித்து புகலிடம் கோரி வருவதாகவும் இதில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment