Wednesday, June 19, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டம் ஓர் வெள்ளை யானையாகும் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த கால அனுபவங்கள் இதனை நிரூபித்துள்ளன. டுவிட்டர் ஊடாக அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ஓர் பிரஜையின் கோணத்திலிருந்து பார்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

நிர்வாக ரீதியாக 13ம் திருத்தச் சட்டம் ஓர் வெள்ளை யானை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரப் பகிர்வானது கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மிகவும் தாழ்ந்தளவிலிருந்து அதிகாரம் பகிரப்பட வேண்டுமேன அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராம ராச்சியம் மற்றும் பஞ்சாயத்து போன்ற நிர்வாகக் கட்டமைப்பு மூலம் அதிகாரம் பகிரப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எப்போதும் அரசியல் சாசனத்திற்கு தலை வணங்குவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தவில்லை என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் சில விடயங்களை அமுல்படுத்த கால அவகாசம் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் தொடர்பிலான தேசிய செயற் திட்டம் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் புதிய இணைய தளமொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உயர் அரசாங்க அதிகாரியொருவர் டுவிட்டர் போன்ற சமூக இணையதளமொன்று செவ்வியளித்த முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.

No comments:
Post a Comment