Sunday, June 9, 2013

ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தை இலங்கை அனுமதிக்க வேண்டும்: அமெரிக்கா!

Sunday, June 09, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தை இலங்கை அனுமதிக்க வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
கருத்துச் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பிரான்க் லா ரூ இலங்கைக்கு விஜயம் செய்ய விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான அமெரிக்கப் பிரதிநிதி எய்லீன் டொஹனா தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் பிரதிநிதியின் இலங்கை விஜயத்திற்கான திகதிகளை நிர்ணயம் செய்து அவரின் விஜயத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இலங்கையில்  தொடர்ச்சியாக கருத்துச் சுதந்திர மீறல்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
கருத்துச் சுதந்திரம், சுதந்திரமாக ஒன்றுகூடுதல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தப்பட்டு வருவதாக டொஹனா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை முழுiமாயக நிராகரிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது,
 
ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment