Sunday, June 9, 2013

புத்தளம் நகர சபையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வீடுகள்!

Sunday, June 09, 2013
இலங்கை::புத்தளம் நகர சபையில் பணியாற்றும் மூவினங்களினையும் சேர்ந்த தொழிலாளர்களுக்கு  சொந்தமாக வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக ஹொல்ஸிம்(Holcim) நிறுவனத்தின் உதவியோடு 15 பேருக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
 
சுமர் 8.5 மில்லியன் செலவில் நிர்மாணக்கப்பட்டுள்ள இவ் வீடுகள் அமைந்துள்ள தொகுதிக்கு ஹொல்சிம் சுபிரி கிராமம் என பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வில் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுக்க, புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ், ஹொல்சிம் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பொறுப்பாளரும், நிறுவனத்தின் உப தலைவருமான எடம் லயினம், புத்தளம் பெரிய பள்ள தலைவர்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment