Sunday, June 9, 2013

ஜெயலலிதா முன்னிலையில்: 40 தொகுதிகளிலும் வெற்றி செயற்குழு பெறச்சபதம்!

Sunday, June 09, 2013
சென்னை::முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் நேற்று கூடியது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்திற்கு கழக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தாங்கினார்.
கூட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் அமைப்பு செயலாளர்கள் பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், இ.வி.கே.சுலோசனா சம்பத், தலைமை நிலை செயலாளர் பி.பழனியப்பன், அ.தி.மு.க. மகளிர் செயலாளர் புஷ்பா சசிகலா, இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் டி.ஆர்.அன்பழகன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அமைச்சர் வைகைச்செல்வன் மற்றும் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
 
அமைச்சர்கள் நந்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், பா.மோகன், செல்லூர்ராஜு, செ.தாமுதரன், டி.கே.எம்.சின்னையா, செந்தில்பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ராஜகண்ணப்பன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் கமலாக்கண்ணன் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற பாராள மன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கைப்பெற்று வெற்றி வாகை சூட முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
 
செயற்குழு கூட்டத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு போயஸ் காடனிலிருந்து தலைமை கழகம் வரை அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலிலும் தேரணங்கள் வரவேற்பு பதகைகளும் வைக்கப்பட்டு வந்தது. செயற்குழு கூட்டம் சுமார் 1.30 மணி நேரம் வரை நடைபெற்றது.
 
கூட்டத்தில் வருகிற பாராளமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்று முதல்வரிடம் வெற்றி கனியை சமர்ப்பிப்போம்.
 
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை உட்பட 40 தொகுயிலும் வெற்றிப் பெற்று வெற்றிக்கனியை முதல்வர் ஜெயலலிதாவிந் பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம் என அ.தி.மு.க. குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. செயற்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானம் வருமாறு:-
கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளர், முதலமைச்சருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
மின்சார உற்பத்தியில் தமிழகத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துவரும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர்  பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறது.
இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழினப் பாதுகாவலர்  கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், ஜெயலலிதாவும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறது.
 
தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் கச்சத் தீவை திரும்பப் பெற சட்ட ரீதியாகவும்,  அரசியல் ரீதியாகவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும்  கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது.
 
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிக் கனியை பறித்து கழக நிரந்தரப் பொதுச் செயலாளர்,  தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க செயற்குழு சபதம் ஏற்கிறது.
 
கூட்டுறவுச்சங்கத் தேர்தல்களை நடத்தி காவிரிப் பிரச்சினையை தீர்த்து தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு செயற்குழு பாராட்டு
 
கூட்டுறவுச்சங்கத் தேர்தல்களை நடத்தியக்காட்டியதற்காகவும் காவிரி பிரச்சனையில் தமிழகத்தில் உரிமைகளை நிலைநாட்டியதற்காகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. செயற்குழுவில் பாராட்டும் நன்றியை தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டனர். அதன் விபரம் வருமாறு:-
 
பல்லாண்டு பேசும் சாதனைகளை ஈராண்டில் நிகழ்த்திக் காட்டி சாதனை படைத்த கழக நிரந்தரப் பொதுச் செயலாளர்,  தமிழ் நாடு முதலமைச்சருக்கு பாராட்டும், நன்றியும் நீடூழி வாழ வாழ்த்தும்!தெரிவித்து தீர்மானம் ,தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 110-விதியின் மூலம் தமிழக மக்களின் விதியை மாற்றியதோடு;
 
நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்திக் காட்டி, ஜனநாயகம் தழைத்தோங்க வழி வகுத்த கழக நிரந்தரப் பொதுச் செயலாளர்,  தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு! காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டி, வரலாற்றுச் சாதனை படைத்த கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர், காவேரித் தாய் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு பாராட்டும், நன்றியும்!வறட்சி நிவாரணம் வழங்கி விவசாயிகளின் வாட்டத்தைப் போக்கிய கழக நிரந்தரப் பொதுச் செயலாளர்,  தமிழ் நாடு முதலமைச்சருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துத்கொள்கிறோம்.மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டனர்.

No comments:

Post a Comment