Tuesday, June 4, 2013

ஏ.ரி.எம். அட்டையைத் திருடி பணம் பெற்ற இராணுவ வீரர் விளக்கமறியலில்!

Tuesday, June 04, 2013
இலங்கை::இரா­ணுவ வீரர் ஒரு­வரின் இலத்­தி­ர­னியல் அட்­டையை திருடி வங்­கி­யி­லி­ருந்து பணத்தைப்  பெற்ற குற்­றத்­துக்­காக பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில்  இன்னொரு இரா­ணுவ வீரரைக் கைது செய்­தனர். 

கைது செய்­யப்­பட்­டவர் அக்­க­ரைப்­பற்று நீதிவான்  நீதி­மன்ற பதில் நீதிவான் ஏ. எச். சமீம்  முன்­னி­லையில் ஆஜர் ­ப­டுத்­தப்­பட்­ட­போது எதிர்­வரும் 5 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்ளார். 

இச் சம்­பவம் தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வ­து, சந்­தேக நபர் இரு தட­வைகள் ஏ.ரி.எம். அட்­டையைத் திருடி  இரு நபர்கள் மூலம் பணத்தை அக்­க­ரைப்­பற்று மக்கள் வங்­கியிலிருந்து இரு­பத்­தா­றா­யிரம் ரூபா பெற்­றுள்ளார்.

இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தெரிய வந்­ததை அடுத்து பொலிஸார், நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய மக்கள் வங்கி கம­ராவின் மூலம் பணம் பெற்­ற­ வரை அடை­யாளம் கண்டு  சந்­தேக நபரைக்  கைது செய்து நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தினர். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

No comments:

Post a Comment