Friday, June 28, 2013

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது!

Friday, June 28, 2013
இலங்கை::ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்கும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
 
இச்சந்திப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையக காரியாலயமானகே  தாருஸ்ஸலாத்தில் இரவு 7.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை இடம்பெற்றது.
 
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அதன் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீ.ல.மு.கா செயலாளர் நாயகம் பா.உ ஹஸனலி, ஸ்ரீ.ல.மு.கா  பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சர்வதேச விவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
ஓன்றரை மணித்தியாலம் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் தற்போதய அரசியல் சூழ்நிலை, சிறுபான்மை சமூகங்கள் அதிகார பகிர்வின் உச்ச பயன்களை அடையக்கூடிய வழிமுறைகள், 13ம் சட்ட திருத்தத்திற்கு ஏதிராக எழுந்துள்ள சவால்கள் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
 
இவ்வாறான சந்திபுகளை தொடர்ந்தும் மேற்கொள்வது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீர்மானித்துள்ளன.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இச்சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன் மு.கா.வின் அரச முரண்பாடு தொடர்பில் முக்கிய நகர்வாகவும் கருதப்படுகிறது.
 
இந்த சந்திப்பின்போது, 13ஆவது திருத்தச் சட்டமூலத்தை திருத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள பிரயத்தனம் மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் வடமாகாண சபைத்தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக இருத்தரப்பும் ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment