Friday, June 28, 2013
இலங்கை::முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியையும் தற்போதைய அரசையும் இரண்டாக பிரிப்பதற்கு 13 ஆவது திருத்தத்தை துரும்பாகக் கொண்டு அரசில் உள்ள சில அமைச்சர்களை தூண்டிவிடுகின்றார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், ஸ்ரீ.ல.சு.கட்சியை இரண்டாகப் பிரித்ததன் பின்னர் சந்திரிக்காவின் மகன் விமுக்தியைக் கொண்டு அரசியல் நடாத்துவதற்காக அவர் முயல்கின்றார்.
இலங்கை - இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திடும் விடயத்தில் எதிராக இருந்தவர்கள் தற்பொழுது அதற்கு ஆதராவாக உள்ளார்கள். ராஜித்த, ரேஜினோல் குரே போன்றோர்கள் சந்திரிகாவின் கணவரின் கட்சியான மகஜன கட்சியில் இருந்தவர்கள். அவர்கள் அன்றும் ஆதரவாக இருந்தார்கள் இன்றும் ஆதரவாகப் பேசுகின்றனர்.
ஆனால் செப்டம்பரில் தமிழ்த் தேசிய முன்னணியிக்கு வட மாகாண சபை ஆட்சி செல்வதற்கு முன் 13 ஆவது திருத்தத்தில் பொலிஸ், காணி அகற்றவேண்டும் அந்த நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. வடக்கில் எமது கட்சி போட்டியிடுவதில்லை எனத் தெரிவித்தார்.
இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை முதலில் மீறியது இந்தியாவே. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் புலிகள் ஆயுதத்தை கீழே வைப்பார்கள் என்று சொல்லியே இந்தியா ஒப்பந்த்த்தில் கைச்சாத்திட்டது. ஆனால், ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 5 நாட்கள் சொல்லவில்லை புலிகள் ஆயுதத்தை வைக்காமல் இருந்தனர். இதற்கு இந்திய உருதுணையாக இருந்த்தினால் இவ்வுடன்படிக்கையை முதலில் இந்தியாவே மீறியது.
அங்கு ஊடகவியலாளர் ஒருவர், ஜ.தே.கட்சி 13 ஆவது திருத்தத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ள ஆதரவு இல்லை என தெரிவித்துளார்களே? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்கும்போது, ஐ.தே.கட்சி எதிர்காலத்தில் தமிழர் கூட்டணியுடன் இணைந்து அரசியல் செய்வதற்காகவே உள்ளனர். அதனால் தமிழர் கூட்டணிக்கு ஆதரவாகவே ஐ.தே.கட்சி செயல்படும் என்றார்.
மேலும் ஊடகவியலாளர் ஒருவர், இந்தியா 13 ஆவது திருத்தத்தினை மேற்கொள்ளக்கூடாது என இலங்கை அரசுக்கு தெரிவித்தால் உங்களது நிலைப்பாடு என்னவா இருக்கும் எனக் கேட்டார்.
இது இந்தியாவின் லோக சபை இல்லை இலங்கைப் பாராளுமன்றம். எனவே, இலங்கை விவகாரத்தில் நாம் உறுதியாக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் வாசுதேவ நானயக்கார 13 ஆம் திருத்தச் சட்டம் குறித்து எவ்வித ஆதரவையும் தெரிவிக்கவில்லையே?
வாசுதேவ நாணயக்கார போன்றோர் ரீ.என்.ஏ ஆதரவாகப் பேசுகின்றனர். அவர்கள் யுத்தம் செய்யாமல் சமாதன செய்யச் சொன்னவர்கள். வட கிழக்கை இணைத்து சுயாட்சி முறை வழங்கச் சொன்னவர்தான் வாசுதேவ நாணயக்கார போன்றோர்கள்.
ஆனால், ஐனாதிபதி தற்போது உள்ள ஆட்சியில் உள்ள சகல கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக்கொண்டு இத் திருத்தத்தை மேற்கொள்ளவே முயற்சிப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

No comments:
Post a Comment