Friday, June 28, 2013

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!:-ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு காவல் நீடிப்பு!

Friday, June 28, 2013
ராமேஸ்வரம்::தனுஷ்கோடியில் இருந்து, நாட்டுப்படகில், 6 கிலோ கஞ்சாவை, இலங்கைக்கு கடத்த முயன்ற, இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இலங்கைக்கு, கஞ்சா கடத்துவதாக, ராமேஸ்வரம் கியூ பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில், தனுஷ்கோடி அருகே, இருவரை கைது செய்து விசாரித்தனர்.
அவர்களிடம் இருந்த, 6 கிலோ கஞ்சாவையும், அதை, இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற படகையும், பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய, மேலும் சிலரை, தேடி வருகின்றனர்.
 
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு காவல் நீடிப்பு!
 
ராமேஸ்வரம்::இலங்கை கடற்படையினரால், சிறையில் அடைக்கப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேருக்கு, ஜூலை 11ம் தேதி வரை, சிறைக் காவலை நீட்டித்து, மன்னார் கோர்ட் உத்தரவிட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து, 15ம் தேதி, மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் எட்டு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்கள், மன்னார் கோர்ட்டில், நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். ஜூலை 11ம் தேதி வரை, சிறையில் அடைக்க, கோர்ட் உத்தரவிட்டது.
இதே போல், ஜூன் 5ம் தேதி, மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த, 49 மீனவர்களும், 21 நாட்களாக, யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் சிறைகளில், அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், ஜூலை 4ம் தேதி, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment