Friday, June 28, 2013
இலங்கை::13ஆவது அரசியல் யாப்பு திருத்தம் இந்த நாட்டின் பாதுகாப்புக்கும் ஐக்கியத்துக்கும் பாரிய அச்சுறுத்தல் என மக்கள் ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது.
13ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபை ரத்து போன்றவை தொடர்பில் தமது நிலைப் பாட்டை தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம் பெற்றபோது அதில் உரையாற்றிய மக்கள் ஐக்கிய முன்னணியின் (ணிரிஜி) தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு குறிப் பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் :-
அந்த காலத்தில் 13 வது திருத்தச் சட்டம் யாப்புக்கு மாறாக சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்டது. அன்றைய சபாநாயகர் சட்ட திருத்தத்திற்கு கையொப்பம் இட்ட பின்னரும் சட்டத்தை ரத்துச் செய்யுமாறு கோரி நாம் உயர் நீதிமன்றம் சென்றோம்.
ஆனால் உயர் நீதிமன்றம் எமது கோரிக்கையை நிராகரித்தது.
மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைக்கும் இடையில் மோதல் நிலை ஒன்று ஏற்படுவதற்கு உள்ள வாய்ப்பை தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மக்கள் ஐக்கிய முன்னணி என்ற அடிப்படையில் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எமது பூரண ஆதரவை வழங்குகிறோம். மாகாண சபை இருந்தாலும் அது நாட்டின் அபிவிரு த்தியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. தற்போதும் கூட அபிவிருத்தி திட்டங்கள் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆளுநர் ஆகியோர் ஊடாக செயற்படுத்தப்படுகிறது.
மாவட்ட அடிப்படையில் நிர்வாகத்தை சீர்செய்வது உள்ளூராட்சி சபைகளுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் தேரர்கள் அடங்கிய அகில இலங்கை உத்தர சங்க சபா யோசனை முன் வைத்துள்ளது. எமது கட்சி அந்த யோசனைக்கு ஆதரவு அளிக்கிறது.
அதற்கென பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment