Monday, June 10, 2013

சீனாவில் நுழைவு தேர்வின் போது பெண்கள் "பிரா' அணிய தடை!!


Monday, June 10, 2013
பீஜிங்:சீனாவில், சமீபத்தில் நடந்த தேசிய கல்லூரி நுழைவு தேர்வில், பெண்கள், "பிரா' அணிய தடை விதிக்கப்பட்டது.
சீனாவின், தேசிய கல்லூரியில் சேருவதற்கான நுழைவு தேர்வு, கடந்த வாரம் நடந்தது. நாடு முழுவதும், 90 லட்சம் மாணவர்கள், இந்த தேர்வை எழுதினர்.
பெண்கள், உலோகத்தினாலான கொக்கியை கொண்ட, "பிரா' அணிய, இந்த தேர்வின் போது தடை விதிக்கப்பட்டிருந்தது.
 
கடந்த தேர்வுகளின் போது, பெண்கள் தங்கள் பிராவில், "இயர் போன்'களை வைத்து கொண்டு, மொபைல் போன் மூலம் விடைகளை கேட்டு எழுதினர்.
கடந்த, 2008ல் நடந்த தேர்வில், ஒரு பெண், தன்னுடைய பிராவில் கேமராவை வைத்துகொண்டு, கேள்வி தாளை படம் பிடித்து, வெளியில் காத்திருந்த மாணவர்களுக்கு உதவினார்.
 
இது போன்ற தில்லு முல்லுகளை தவிர்க்க, பெண்கள், உலோக கொக்கி கொண்ட பிராவை அணிய, இந்த முறை தடை விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment