Monday, June 10, 2013

இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானத்தை தயாரித்த மொரட்டுவ பொறியியல்பீட மாணவர்கள்!!!

Monday, June 10, 2013
இலங்கை::இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானமொன்று தயாரிக்கப்பட்ட குழுவுக்கு பதுளையை பிறப்பிடமாக கொண்ட மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவரான ஆபித் ருஷ்டி தலைமைதாங்கியுள்ளதுடன், அனுருத்த தென்னகோன், அசோக் அரவிந்த , பசிந்து மதுசங்க, ஹோமேஷ் வத்சலய ஆகிய பொறியியல் பீட நான்கு மாணவர்களும் பங்களித்துள்ளனர்.
 
பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹனவின் மேற்பார்வையில் இந்தஆளில்லா உளவு விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது . அமேரிக்கா, இஸ்ரேல் போன்ற வல்லரசு நாடுளில் மாத்திரம் காணப் படும் இந்த ஆளில்லா உளவு விமான தொழில் நுட்பம், இந் நாட்டில் தயாரிக்கப்பட்டதானது இந் நாட்டு தொழில்நுட்ப வரலாற்றில் மைல் கல்லாக கருதப் படுகின்றது.
 
200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விமானத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அனுசரணையாளர்களின் உதவியுடன் விமானத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
 
கடுபெத்த பொறியியல் பீட இறுதியாண்டு மாணவர்களான இக்குழு குறிப்பிட்ட இவ்விமானத்தினை மின்கல உபயோகத்துடன் செயட்படகூடியவாரே வடிவமைத்துள்ளனர். இதை எரிபொருள் பாவனையுடன் இயங்கக் கூடியவாறு மேலும் பல தொழில்நுட்பத்துடன் இதை வடிவமைக்கும் செயற்திட்டம் கடுபெத்த பொறியியல் பீட அடுத்த வருட மாணவர்களிடம் ஒப்படஈகப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
 
இதற்கிடையில் கடுபெத்த பொறியியல் பீடத்தின் இக்கண்டுபிடிப்பின் மூல அதிகார உரிமத்தை (patent right) இலங்கை வான் படை கோருவதற்கான முயற்சிகளும்  நடப்பதாகவும் தெரிய வருகின்றது, இத்திட்டத்தின் மேற்பார்வையாளராக கடமையாற்றிய பேராசிரியர் சுதத் ரோகன அவர்கள் இலங்கை வான் படை தொழிநுட்ப பிரிவிலும் ஒரு பகுதிநேர விரிவுரையாளர்   என அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment