Friday, June 21, 2013

மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரம் வழங்குவதில்லை என்பதை இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திற்கு பல தடவைகள் அறிவித்த போதும் உரிய பதில் வழங்கப்படவில்லை: கோத்தபாய ராஜபக்ஷ!

Friday, June 21, 2013
இலங்கை::மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரம் வழங்குவதில்லை என்பதை இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திற்கு பல தடவைகள் அறிவித்த போதும், இந்திய அரசாங்கம் இதுவரை அதற்கு உரிய பதிலை வழங்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அரசாங்கம், தனது இந்த தீர்மானத்தை இந்திய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, தெரியப்படுத்தியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
 
அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கடந்த காலங்களில் புதுடெல்லி சென்று நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இதனை அறிவித்திருந்தனர் எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment